fbpx

ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை….! காஞ்சிபுரம் அருகே சோகம்….!

ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களை மிகக் கடுமையாக திட்டுவதும், தாக்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.

அதாவது, தமிழக அரசு மாணவர் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பார் ஆசிரியர்கள் எந்த விதத்திலும் திட்டுவதோ, அடிப்பதோ அல்லது மனரீதியாக அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவதோ கூடாது என்று தெரிவித்திருக்கிறது.

என்னதான் தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருந்தாலும், ஆசிரியர்கள் அதனை பின்பற்றுவதில்லை. அதன் காரணமாக, பல அப்பாவி மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடம் தண்டனை அனுபவிப்பதும், நாள்தோறும் மன உளைச்சலுக்கு ஆளாவதும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் அடுத்துள்ள புத்தேரி பகுதியை சேர்ந்த ரஜினி, லதா தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் ரஜினி அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினரின் 2வது மகள் தான் கனிஷ்கா. இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், இவர் ஆங்கில பாடத்தில் சற்றே ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் வகுப்பில் ஆசிரியை அவரை திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு கனிஷ்காவை அவருடைய பெற்றோரை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வருமாறு ஆசிரியை தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக, மனமுடைந்து காணப்பட்டு வந்த கனிஷ்கா பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிவடைந்து வீட்டிற்கு வந்த கனிஷ்காவின் தாயார் அறைக்கதவை திறந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே கனிஷ்கா தூக்கில் தொங்கியபடி பிணமாக காட்சியளித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கனிஷ்காவின் தாயார் கதறி அழுதுள்ளார். அவர் அழுகின்ற சத்தத்தை கேட்ட அண்டை வீட்டார்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, கனிஷ்காவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினருக்கு மருத்துவமனை சார்பாக தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி உயிரிழந்ததால் பெற்றோரும், அவருடைய சகோதரிகளும் கண்ணீர் விட்டு கதறிய காட்சி அங்கிருந்தவர்களை சற்றே கலங்க வைத்திருக்கிறது. பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் புத்தேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த மாணவியின் பொருட்களை பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது ஒரு டைரியில் அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த கடிதத்தில் என்னுடைய மிஸ் திட்டிட்டாங்க நாளைக்கு அப்பாவை வேற கூட்டிட்டு வரச் சொன்னாங்க, என்னை இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிக்க வச்சிருந்தா நான் அசிங்கப்பட்டு இருக்க மாட்டேன். பிட் அடிச்சவங்க எல்லாம் நல்லா மார்க் எடுக்குறாங்க, ஆனா என்னால மார்க் எடுக்க முடியல. ஐ அம் நாட் ஹேப்பி அம்மா” அக்கா, தங்கச்சி எல்லாம் நல்லா படிக்கிறாங்க என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

Next Post

17 வயது சிறுமியை தாயாக்கிய பானி பூரி கடைக்காரர்….! திருவண்ணாமலையில் கொடூரம்….!

Fri Jan 13 , 2023
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற குற்றங்கள் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தியாவில் தான் அதிகம் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த குற்றங்கள் குறைவதில்லை. காரணம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல சட்டங்களை இயற்றினாலும் […]

You May Like