fbpx

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணினி ஆசிரியர்…..! கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை…..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள தில்கார் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அனில் குமார். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முகமதுஅலி என்ற ஆசிரியர் கணினி படங்களை எடுத்து வந்தார். இவர் அங்கே படிக்கும் பல மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை வழங்கி வந்ததாக புகார் எழுந்தது. 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் சுமார் 12 மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டதாக புகார் வழங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனை குறித்து அங்கே பணியாற்றும் ஆசிரியர் சஜியா மற்றும் தலைமை ஆசிரியர் அனில் குமாரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து, பெற்றோரின் கவனத்திற்கு அவர்கள் இந்த பிரச்சனையை கொண்டு சென்றதால் அவர்கள் காவல்துறையிடம் புகார் வழங்கினர். அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை கொண்டனர். அப்போது பள்ளி கழிவறைகளில் ஆணுறைகள் எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறை புகாருக்கு ஆளான 30 வயது மதிக்கத்தக்க கணினி ஆசிரியரை கைது செய்தது. அத்துடன் தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் சஜியா உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சரியான விசாரணை நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வட்டார கல்வி அலுவலர் பிரியங்க் ஜெயின் உறுதி அளித்திருக்கிறார்.

Next Post

கள்ளக்குறிச்சி அருகே……! சொத்தில் பங்கு கேட்ட தம்பியை அடித்தே கொலை செய்த அண்ணனை கைது செய்த காவல்துறை….!

Mon May 15 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் ஏழுமலை. இவருக்கு கமலக்கண்ணன், பிரபு, இளையராஜா என 3 மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏழுமலை சென்ற வருடம் உயிரிழந்தார். அவருடைய சொத்துக்களை மூத்த மகனான கமலக்கண்ணன் நிர்வாகித்து வந்தார். இத்தகைய நிலையில், திருமணம் ஆகாத கமலக்கண்ணனின் கடைசி தம்பி இளையராஜா என்பவர் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டினை கட்டுவதற்காக கூடுதலாக கடன் பெற்றுள்ளார். இதனால் […]

You May Like