காரைக்காலில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டுனராகவும் இளமாறன் (55) என்றவர் நடத்துனராகவும் பணியாற்றி வந்தனர். இந்த பேருந்தில் அம்பரதூறு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுரேஷ் (45) என்ற பயணி ஏறினார் அதோடு அவர் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பேருந்தில் நடத்துனர் இளமாறன் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் சுரேஷை கீழே இறக்கி விட்டார். இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட சுரேஷ் கற்களை வீசி பேருந்து பின்புறம் இருந்த கண்ணாடியை உடைத்திருக்கிறார்.
இதற்காக பேருந்து நடத்துனர் இளமாறன் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, நாச்சியார் கோவில் காவல் நிலைய காவல்துறையினர், கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவை சேர்ந்த சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.