fbpx

தனிமையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த இளம் ஜோடி…! மிரட்டி பணம் பறித்த போலி காவல்துறை அதிகாரி….!

காவல்துறை உங்கள் நண்பன் என்று பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது. அந்த பழமொழி எதற்காக வந்தது என்று கேட்டால் காவல்துறை உங்களுடைய நண்பன் ஆகவே எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் துணை நின்று அந்த பிரச்னையிலிருந்து உங்களை மீட்டுக் கொண்டு வருவோம் என்பதை விளக்கும் விதமாகத்தான் இந்த பழமொழி எழுதப்பட்டது.

அதற்கேற்றார் போல காவல்துறையில் பல நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எல்லோரையும் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில தவறான அதிகாரிகளும் இதே காவல்துறையில் தான் இருக்கிறார்கள்.

ஆனால் காவல்துறையை போல வேடமிட்டு பொதுமக்களிடம் வரி வசூல் செய்வது, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், ஹரியானா மாநிலம் குரு கிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுபம் தனேஜா. இவர் கடந்த புதன்கிழமை இரவு 8 மணி அளவில் தன்னுடைய சக பெண் ஊழியருடன் அவருடைய காரில் கிங்டம் ஆப் ஹெவன் என்ற பகுதியில் இருந்துள்ளார். அப்போது காவல்துறை உடைய அணிந்து ஒரு நபர் அந்த காரின் அருகே வந்து கண்ணாடியை கீழிறக்குமாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் காரில் சுபம் ஒரு பெண்ணுடன் இருப்பதை கண்ட அந்த போலி காவல்துறை அதிகாரி இருவரின் கைபேசி மற்றும் ஐடி கார்டுகளை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன் பிறகு அதனை வாங்கி பார்த்த பின்னர் இருவரையும் அந்த நபர் மிரட்ட தொடங்கியுள்ளார்.

அதாவது தாங்கள் இருவர் மீதும் வழக்கு பதியப் போகின்றேன். பொதுவெளியில் காருக்குள் பாலியல் உறவில் இருந்ததாக வழக்கு போடட்டுமா? காவல் நிலையத்திற்கு வாருங்கள், என்றெல்லாம் தெரிவித்து அவர்கள் இருவரையும் அந்த நபர் மிரட்டியதால், பதறிப்போன சுபம் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் தங்களை விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். அந்த போலி காவல்துறை அதிகாரி.

மிகுந்த பயத்தில் இருந்த சுபம் அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டுகள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். அத்துடன் தங்களிடம் கையில் இருந்த 40,000 ரூபாய் பணத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 1,40,000 ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு தான் இருவரின் செல்போன் மற்றும் ஐடி கார்டுகளை அந்த போலி காவல்துறை அதிகாரி திருப்பிக் கொடுத்துள்ளார். வீடு திரும்பிய பிறகு இருவருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பிறகு அவர்கள் இருவரும் காவல் நிலையத்தை அணுகியுள்ளனர்.

அப்போதுதான் அந்த நபர் போலி காவல்துறை அதிகாரி என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட சுபம் வழக்கு பதிவு செய்திருக்கிறார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்து கொடுக்கிறோம் என்று காவல்துறை உறுதி அளித்து இருக்கிறது.

Next Post

கள்ளக்காதனுடன் ரூம் போட்டு என்ஜாய் செய்த மனைவி…..! தட்டி கேட்ட கணவன் படுகொலை….!

Sat Jan 14 , 2023
தற்காலத்து ஆண்கள் கிளியை போல வீட்டில் மனைவி இருந்தாலும், குரங்கை போல ஒரு சின்ன வீட்டை தேடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அது போன்ற பல சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருக்கிறது தகராபு வலசை என்ற கிராமம்.இந்த பகுதியில் உள்ள எம் பி டி காலனியைச் சார்ந்தவர் ஜோதி, இவருக்கும் பைடி ராஜு என்ற நபருக்கும் […]

You May Like