fbpx

அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையத்தின் அடுத்த அப்டேட் இதுதான்!

ஏற்கனவே கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாகவும், பல இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் சேதம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த 9ம் தேதி நல்லிரவு 2 மணி அளவில் சென்னை, மாமல்லபுரம் அருகே இந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், இந்த 2 நாட்களாக தான் தமிழகத்தில் மழை இடைவேளை விட்டிருந்தது. பொதுமக்களும் அப்பாடா என்று பெருமூச்சுடன் நிம்மதியாக இருந்தார்கள்.ஆனால் பொது மக்களின் நிம்மதியை குலைக்கும் விதமாக கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதேபோல வரும் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேபோல எதிர்வரும் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல், 45 கிலோமீட்டர் வேகத்திலும், நடுநடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது.தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்றும்,நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல், 45 கிலோமீட்டர் வேகத்திலும், நடுநடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல், 45 கிலோமீட்டர் வேகத்திலும், நடுநடுவே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். மேலே குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Next Post

பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப்படுகொலை! முன் பகை காரணமா?

Thu Dec 15 , 2022
சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை, சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ரவுடி சுரேஷ் கருக்கா(45). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன. மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையிலும் இருக்கிறது. ரவுடியான சுரேஷின் மனைவி விமலா தூய்மை பணியாளராக இருந்து வருகிறார். தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கணவர் சுரேஷ் சென்றுள்ளார். விமலா தூய்மை பணியை செய்து கொண்டிருந்தபோது 2 சக்கர வாகனத்தில் சிலர் அச்சுறுத்தும் வகையில் அங்கே […]

You May Like