செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள வெள்ள பந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா இவருடைய கணவர் சந்திரன்.
இந்த நிலையில், சித்ராவுக்கு சக்திவேல் என்ற நபருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது இதனை அறிந்த சந்திரன் சித்ராவையும் சக்தி வேலையும் கண்டித்துள்ளார்.
அந்த வகையில், தங்களுடைய கள்ளக்காதலை தொடர முடியாதோ என்ற பயத்தில் சித்ராவும், சக்திவேலும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் புதைத்து விட்டனர்.
இந்த நிலையில், தற்சமயம் அந்த கிராம ஏரிக்கரையில் கடுமையான துர்நாற்றம் வீசி இருக்கிறது. அதோடு ஆங்காங்கே ஒரு சில எலும்பு துண்டுகளும் சிதறிக் கிடந்திருக்கின்றனர். இதன் காரணமாக, சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் சிதறி கிடந்த எலும்பு துண்டுகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதன் பிறகு காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தீவிரப்படுத்தி விசாரிக்க தொடங்கினர்.
காவல்துறையினரின் விசாரணையில் சித்ரா, சக்திவேல் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், அது தெரிந்து சந்திரன் 2 பேரையும் கண்டித்தவுடன் அவர் மேல் உள்ள பயத்தால் சந்திரனை இருவரும் சேர்ந்து கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்திருக்கின்றன என்ற விபரம் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சித்ராவையும், சக்தி வேலையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையிலடைத்த காவல்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.