தற்போது திருமணம் ஆன பிறகும் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. திருமணம் நடந்து மனைவி வீட்டில் இருந்தாலும் வெளியில் ஆண்கள் தாங்கள் பார்க்கும் பெண்கள் மீது மோகம் கொண்டு, அவர்கள் பின்னால் சொல்வதால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் அருள்தேவி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார்.
அந்த புகாரில் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவருடைய உறவினர்கள் அவருடைய 2வது திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த புகாரினடிப்படையில் மஞ்சுநாதன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.