fbpx

மனநிலை பாதிப்பு கல்லூரி மாணவர் தற்கொலை! தெலுங்கானாவில் பரிதாபம்!

தெலுங்கானா மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுப்பிரசாத் என்ற மாணவர் முதலாமாண்டு பி யு சி படித்து வந்திருக்கிறார்.

இவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது, இந்த சூழ்நிலையில்தான் திடீரென்று அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தகவலை அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் தற்கொலை தொடர்பான கடிதம் ஒன்றை அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். அந்த கடிதத்தில் தனக்கு ஓசிடி பாதிப்பு இருக்கிறது என்று அந்த மாணவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பாதிப்பு உண்டானவருக்கு தேவையில்லாத எண்ணங்கள் மற்றும் பயம் உள்ளிட்டவை தோன்றலாம். அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் போகாது, ஆகவே கட்டாயத்தின் அடிப்படையில் மீண்டும், மீண்டும் ஒரு செயலை செய்யும் நிலையில் அவர் காணப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நிர்மல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சல்லா பிரவீன் குமார் தெரிவித்ததாவது ஐஐடி பசாரில் பானுபிரசாத் என்ற மாணவர் விடுதியில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு மனநிலை பாதிப்புகள் இருந்திருக்கின்றன.

இதற்காக சில தினங்களுக்கு முன்னர் கல்லூரி நிர்வாகம் அவருக்கு 2 முறை கவுன்சிலிங் வழங்கி உள்ளது. ஏனென்றால் அவர் மனரீதியாக ஆழ்ந்த குழப்பத்தில் இருந்துள்ளார். ஆனால் நேற்று இரவு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார், அந்த கடிதத்தில் தனக்கு ஓசிடி பாதிப்புகள் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தற்சமயம் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் காவல்துறை அதிகாரி.

Next Post

விரைவில் சந்திப்போம்...ஓய்வு பெறும் முடிவை மாற்றிய மெஸ்ஸி - உற்சாகத்தில் ரசிகர்கள்

Mon Dec 19 , 2022
உலகக் கோப்பைப் போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியிருந்த அர்ஜென்டினா கால்பந்து கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தற்போது கோப்பையை வென்றதால் தனது முடிவை மாற்றியுள்ளார்.தோஹா: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான பைனலில், அசத்திய அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நேற்றைய பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் அதிகப்படியான […]

You May Like