விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சத்யராஜ் (27) இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கணவர் சத்யராஜ் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சசிகலாவிற்கு அதே ஊரைச் சார்ந்த ஜானகிராமன் (25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. ஜானகிராமன் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார் இருந்தாலும் அடிக்கடி ஜம்போதிக்கு வந்து சசிகலாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த விவகாரத்தை தெரிந்து கொண்ட சசிகலாவின் கணவர் சத்யராஜ் மனைவியை கண்டித்து இருக்கிறார்.
ஆகவே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது இத்தகைய நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய கள்ளக்காதலர்கள் இருவரும் திட்டமிட்டனர். அதன்படி சசிகலா என்னை மன்னித்து விடுங்கள், இனி இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று தெரிவித்து சென்னையில் இருந்த கணவரை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். சசிகலா இதனை நம்பி சத்யராஜும் சென்னையிலிருந்து நாட்டார்மங்கலம் கூட்டு ரோட்டில் வந்து இரவில் இறங்கியுள்ளார்.
அப்போது கணவருக்காக காத்திருந்த சசிகலா, அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டாம். சங்கராபாணி ஆற்றங்கரையில் உரையாடிவிட்டு, உல்லாசமாக இருந்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்திருக்கிறார். அப்போது முன்கூட்டியே ஆகிய பதுங்கி இருந்த ஜானகிராமன் திடீரென்று சத்யராஜ் கழுத்து போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சத்தியராஜ் உயிரிழந்து விட்டதாக நினைத்த கள்ளக்காதலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக செஞ்சி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரத்ததளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யராஜை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சத்யராஜ் கழுத்து அறுபட்ட நிலையில், அவரால் பேச முடியாததால் வெள்ளைத்தாளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக எழுதி காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார்.
அதில் என்னுடைய மனைவி சசிகலாவும், கள்ளக்காதலன் ஜானகிராமனும் சேர்ந்து கழுத்தை அறுத்து என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.