விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலணியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (36) இவர் சிவகாசியில் இருக்கின்ற சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். அப்படி பணியாற்றி வந்த போது கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த சமயத்தில், பயங்கர ஆயுதங்களுடன் இந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் சமயத்தில் அவரை சரமாரியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உடனடியாக மீட்டு அவசர உறுதியின் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அங்கே சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதோடு அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே சாமுவேல், கண்ணன், சுருட்டை குமார், வீரபத்திரன், குட்டை ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து சுந்தரபாண்டியனை கொலை செய்தது தெரியவந்தது.
வீரபத்திரனை சிவகாசி கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. அதாவது, எங்களுடைய நண்பர் சந்திரன் என்பவரின் மனைவிக்கும் சுந்தரபாண்டிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது இது தொடர்பாக சந்திரன் எங்களிடம் தெரிவித்து கவலையுற்றார் எனக் கூறியுள்ளார் வீரபத்திரன்.
ஆகவே நானும் சாமுவேல், கண்ணன், குட்டை ஆனந்த், சுருட்டை குமார் உள்ளிட்டோரம் இணைந்து கள்ளக்காதலை கைவிடுமாறு சுந்தரபாண்டியிடம் தெரிவித்தோம் எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கள்ள காதலை தொடர்ந்ததால் அவரை கொலை செய்தோம் என்றும் வீரபத்திரன் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார் அதோடு தலைமறைவாக இருக்கின்ற 4️ பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.