fbpx

தொடர் தொல்லை…..! உல்லாசத்தின் போது பெண் செய்த காரியத்தால் அலறி துடித்த கள்ளக்காதலன் இறுதியில் ஏற்பட்ட துயரம்…..!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை அடுத்துள்ள கண்ணுமேக்கிப் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியைச் சார்ந்த மகேஸ்வரி (30) என்ற பெண்ணின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்ட நிலையில், கூலி வேலை பார்த்து தன்னுடைய 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்த சூழ்நிலைகள் தான் முத்துக்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களுக்கிடையிலான பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்தது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை முத்துக்குமார் வாங்கிக் கொண்டுள்ளார். ஆனாலும் அதனை திருப்பி கேட்ட போது முத்துக்குமார் தர மறுத்துவிட்டார்.

அதோடு, அவ்வப்போது பணம் கேட்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தும் வந்திருக்கிறார். இந்த தொந்தரவுக்கு முடிவு கட்ட நினைத்த மகேஸ்வரி கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான காட்டுப்பகுதிக்கு சென்று முத்துக்குமாருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மகேஸ்வரி ஒரு பையில் மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து அந்த பெட்ரோலை முத்துக்குமாரின் இடுப்புக்கு கீழ் பகுதியில் ஊற்றி தீ வைத்தார். இதனால் படுகாயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மகேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

பாக்கியலட்சுமி தொடரில் புதிதாக என்ட்ரி கொடுத்த ரஞ்சித்…..! கோபிக்கு இனி வேலையில்லையா…..?

Wed Mar 8 , 2023
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்தார். இனிவரும் காலங்களில் இவர்தான் இந்த தொடரின் கதாநாயகனாக இருப்பார் எனவும், கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இனி இந்த தொடரில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காது எனவும் அவரே தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் இனி பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காதா? இனி […]

You May Like