தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நோய் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 99 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்து இருக்கிறது.
மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று புதிதாக 397 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1890 பேருக்கு நோய் தொற்று பரவால்ல உறிஞ்சி செய்யப்பட்டுள்ளது இது கடந்த 210 தினங்களில் இல்லாத உயர்வு என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
நோ தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவமனைகள் தயார்நிலை தொடர்பாக வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் ஒத்திகை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது