சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் பலசரக்கு கடை நடத்தி வரும் நபர் தான் மனோபாலா. இவருடைய கடைக்கு வந்த டீ புதுரை சேர்ந்த அழகுபாண்டி மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பணம் கொடுக்க மனோபாலா மறுத்து விட்டதால் அழகு பாண்டி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மனோபாலாவை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்கள் சிவகங்கை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல சில நாட்களுக்கு முன்னால் சிவகங்கை தெப்பக்குளக் கரையில் இருக்கின்ற உணவகம் ஒன்று பார்சல் உணவு வாங்கிய இரண்டு பேர் கடையின் உரிமையாளரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர் இந்த நிலையில் சிவகங்கை நகரில் பணம் கேட்டும் வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமலும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அந்த மாவட்டத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சந்தித்து தற்போது கடை வியாபாரிகளை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவ்தால் சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.