தமிழ்நாட்டில் குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், சுகாதாரதுறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆகவே தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்றுப் பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் வக்கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி 100% முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், கட்டுப்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டு இருக்கின்றது.
அந்த வகையில், திரையரங்கு மற்றும் மருத்துவமனைகளில் மக கவசம் கட்டாயம் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சந்தை மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் மகக்கவசம் கட்டாயம் என பொதுசுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இனி முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கும் முறையும் மிக விரைவில் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.