fbpx

நிதி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தில் முதலீடு செய்த 76000 பேரின் விவரங்களை சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டிருக்கிறது……! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன….!

கோவை பீளமேட்டில் யூ டி எஸ் என்ற பெயரில் கடந்த 2017 ஆம் வருடம் முதல் செயல் பட்டு வந்த நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி பல்வேறு திட்டங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்களும் மற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்த 76000 பேர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த நிலையில் தான் அறிவித்தபடி பணத்தை கொடுக்கவில்லை என்று முதலீட்டாளர்கள் புகார் வழங்கினர் அந்த நிறுவனமும் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சூலூரை சேர்ந்த ரமேஷ்(30) என்பவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மொத்த முதலீட்டுத் தொகை சுமார் 1300 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், தற்போது வரையில் 31 பேர் மட்டுமே இது தொடர்பாக புகார் வழங்கியிருக்கின்றன. டிஎஸ்பி முருகானந்தம் தலைமையில், ஆய்வாளர்கள் ராஜசேகர், லட்சுமி, மகேஸ்வரி மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தனிப்படை காவல்துறையினர் இது தொடர்பாக தெரிவித்ததாவது, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 76000 பேரின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்களுடைய பெயர் முகவரி போன்றவற்றை சேகரித்து அவர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு? இழந்த தொகை எவ்வளவு? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இது குறித்து சரியான வழிகாட்டுதல்கள் வழங்க பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி அங்கீத் ஜெயின் கோவைக்கு வர உள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

16 வயது மாணவியை சீரழித்த 65 வயது முதியவர்…..! நாமக்கல் அருகே கொடூரம்….!

Thu May 18 , 2023
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தபோது அதிபகுதியைச் சேர்ந்த வீரமுத்து (65) என்ற முதியவர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடிக்கடி மாணவியை அந்த முதியவர் […]

You May Like