சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(32) ராயப்பேட்டையில் பட்டய கணக்காளர் படிப்புக்கான பயிற்சி மையம் ஒன்றை அவர் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த முடிந்த சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை காண்பதற்கு டிக்கெட் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போயிற்று.
இந்த சூழ்நிலையில்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் 2023 என்ற பக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக அறிந்து அதனை அணுகி உள்ளார். அதன் பெயரில் வினோத் யாதவ் என்பவரிடம் 20 டிக்கெட்டுகள் வேண்டும் என்று தெரிவித்து 90,000 ரூபாயை இணையதளம் மூலமாக அனுப்பி வைத்திருக்கிறார்.
பணத்தை அனுப்பியும் அவர் டிக்கெட்டுகளை வழங்கவில்லை. இதனை தொடர்ந்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் வழங்கினார் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வினோத் யாதவ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இணையதளம் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்து மோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.