தமிழகத்தில் விபத்துக்கள் இல்லாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் நாள்தோறும் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு விபத்து நடந்த வண்ணம் தான் இருக்கிறது. அதிலும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் லாரி உள்ளிட்ட கதாநாயக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் இது போன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன.
இந்த விபத்துக்களை தடுக்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுனர்களின் கவனக்குறைவு காரணமாகவே உண்டாகிறது என்று சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட விபத்துக்களை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஆகவே அரசு வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுனர்களுக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை கண் காது போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் 50 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு 1 வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக விபத்துக்கள் நடைபெறுவது பெரும் அளவில் தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.