மதுரை அண்ணா நகரில் உள்ள சதாசிவ நகரை சார்ந்தவர் பிரேம்குமார்(35). ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் கடந்த 26 ஆம் தேதி பாண்டி கோவில் அருகே நண்பர் பாண்டி என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் அவரை கடத்தி சென்றது.
பின்னர் சிவகங்கை புதுப்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றது. அவரை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் இல்லை என்று அவர் தெரிவித்தும் விடாமல் அந்த கொம்பன் பீர் பாட்டிலால் அவரை தாக்கியது. அவர் எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற நோக்கத்தில் வீட்டில் நகைகள் இருக்கிறது அதை வேண்டுமானால் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆகவே பிரேம்குமார் அவருடைய நண்பர் பாண்டியன் மூலமாக வீட்டிலிருந்து 34 பவுன் நகைகளை கருப்பாயூரணி டாஸ்மாக் கடையில் வைத்து கடத்தல் கும்பல் கூறிய நபரிடம் கொடுத்துள்ளார். ஆகவே அந்த கும்பல் கேகே நகர் பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்றது.
அத்துடன் இதை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதால் அவர் மிகுந்த பயத்தில் இருந்துள்ளார். ஆனாலும் அந்த கும்பல் தொடர்ந்து கைப்பேசியில் அவரை மிரட்டியதால் நேற்று காலை மாட்டு தாவணி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் காவல்துறையினர் அந்த கும்பலைப் பற்றி விசாரித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலப்பனங்காடியை சேர்ந்த குண்டு சரவணன்(29) என்பவர் பிரேம்குமார் இடம் இருந்து பறித்த நகைகளை மதுரையில் விற்க சென்றபோது நேற்றைய தினம் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உட்பட அவருடைய நண்பர்கள் சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டி தனசேகரன் தனபால் மேலப்பனங்காடி பாய்ஸ் மணி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டனர். தலைமறைவான தனசேகரன் உட்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.