தலைநகர் டெல்லியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜப்பான் நாட்டு பெண் ஒருவர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழுவைச் சேர்ந்த ஆண்கள் அந்த பெண்ணை பிடித்து அவரை துன்புறுத்திய வீடியோ ஒன்று வெளியானது.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் அந்த பெண் ஜப்பானிய நாட்டு சுற்றுப்பயணி என்று கூறப்படுகிறது. அவர் தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கி இருந்தார். தற்போது வங்கதேசத்திற்கு அவர் சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.
அதோடு, இந்த சம்பவம் குறித்து ஒரு சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான விவரங்களை அறிவதற்கு அந்த வீடியோவை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். என்று காவல்துறை துணை ஆணையர் சஞ்சய் குமார் சைன் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் எந்த வெளிநாட்டவரிடம் இருந்தும் எந்த விதமான தவறான நடத்தை குறித்த புகாரோ அல்லது அழைப்புகளோ பகர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு வரவில்லை. சிறுமியின் அடையாளம் அல்லது சம்பவம் தொடர்பாக வேறு ஏதாவது விவரங்களை திரட்ட உதவி புரியுமாறு ஜப்பானிய நாட்டு தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு இருக்கிறது என்று காவல்துறையினரின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காணொளியில் ஒரு ஆண்கள் குழு ஒரு பெண் மீது வண்ணம் பூசுவதை காண முடிகிறது. ஆண்களில் ஒருவர் அந்த பெண்ணின் தலையில் முட்டையை உடைப்பதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. பிடிபட்ட சிறுவர்கள் மீது டிபி சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினரின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
பிடிபட்ட மூவரும் பகர்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர்கள் அதோடு சட்ட நடவடிக்கை தகுதிகள் மற்றும் சிறுமியின் புகாருக்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள்.
இந்த காணொளியை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக டெல்லி மகளிர் ஆணையத்தின் பி சி டபிள்யூ தலைவர் சுவாதி மாலிவால் கூறியிருக்கிறார். தேசிய மகளிர் ஆணையமும் இந்த வீடியோவை கவனத்தில் கொண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு டெல்லி காவல் துறையிடம் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் டெல்லியை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.