fbpx

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கூட்டறிக்கை: நூபுர் சர்மா வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறிய கருத்து நீதித்துறை கண்ணியத்திற்கு எதிரானது…!

இஸ்லாமிய மத இறைதூதர் முகமது நபிகள் பற்றி நூபுர் சர்மா தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா இருவரும் நூபுர் ஷர்மாவினுடைய கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதாகவும் அதனால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன, என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

பொதுவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பது வழக்கம் இல்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கில் மிக கடுமையான வார்த்தைகளை நீதிபதிகள் பயன்படுத்தி இருந்தனர். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழங்கிய கருத்து துரதிருஷ்டவசமானது என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள், அனைவரும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும், வழக்கிற்கும் துளியும் சம்மந்தம் இல்லை என்றும், இதுபோன்ற கருத்துகள், நீதித்துறை கண்ணியத்திற்கு எதிரானது என்றும், இந்த கருத்து நீதித்துறையின் எல்லை மீறிய செயல் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Baskar

Next Post

ஓட்டர் ஐடியுடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு..!

Wed Jul 6 , 2022
வாக்காளர் பட்டியலில் இணைக்க வாக்காளர்களிடம் இருந்து பெறுகிற ஆதார் தரவுகள், பொதுவெளியில் கசிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாக்காளர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டிருப்பது தொடர்கதையாக உள்ளது. எனவே இதைத் தடுப்பதற்காக வாக்காளர் பட்டிலுடன் ஆதாரை எண் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1950-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ […]

You May Like