கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கரியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி(29). இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த சூசை நாதன்(36) என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஷாமினியின் கணவரின் பெயர் ராஜேஷ், ராஜேஷ், ஷாமினி தாம்பதிக்கு 7 வயதிலும் 3 வயதிலும் என 2 மகன்கள் இருக்கிறார்கள்.
அதேபோல ஷாமினிக்கு கள்ளக்காதல் இருப்பதாக சொல்லப்படும் சூசைநாதனுக்கும் 4 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஷாமினிக்கும், சூசைநாதனுக்கும் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் சூசைநாதனின் மனைவிக்கு தெரியவந்தது. ஆகவே அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் தான் கடந்த மாதம் 18ஆம் தேதி ஷாமினி தன்னுடைய 2 குழந்தைகளுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு நாகர்கோவில் அருகே இருக்கின்ற ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் ஒரு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.
மேலும் அந்தப் பகுதியிலேயே அவர்களுடைய காரும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த காரின் கதவை காவல்துறையினர் திறந்து பார்த்தபோது ஷாமினியின் 2 குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு காரில் இருந்து குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு விசாரணையை தொடங்கினார்கள்.
இந்த விசாரணையில் சூசைநாதன் ஒரு டிராவல்ஸ் வாடகைக்கு கார் ஓட்டி வந்திருக்கிறார் என்பதும், சூசை நாதனுக்கும் அவருடைய மனைவிக்கும் திருமணம் நடைபெற்றதிலிருந்து. கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் தான் சூசைநாதன் ஷாமினியை சந்தித்து இருக்கிறார். அத்துடன் ஷாமினியின் குழந்தைகளை சூசைநாதன் தான் காரில் அழைத்துச் செல்வது வழக்கம் என்று சொல்கிறார்கள்.
அப்படி காரில் அழைத்துச் சென்ற போது தான் ஷாமினியுடன் சூசைநாதன் நெருங்கி பழகியதுடன் மனம் விட்டு பேசியுள்ளார். மனைவியின் தொந்தரவு அனைத்தையும் ஷாமினியிடம் சொல்லி புலம்பி இருக்கிறார். நாளடைவில் அவர்களிடம் இருந்த நெருக்கம் கள்ளக்காதலாக மாறியது. இறுதியில் இவர்களால் பிரிந்து வாழ முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிக்கொண்டே வந்ததன் காரணமாக, சூசைய நாதனின் மனைவி கோபம் கொண்டு அவருடைய தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இப்படியான சூழ்நிலையில் தான் வெளியூருக்கு சென்று நிம்மதியாக வாழ தொடங்கலாம் என்று இந்த கள்ளக்காதல் ஜோடி முடிவு செய்ய முடிவு செய்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், காரிலேயே ஊர் ஊராக இவர்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். இந்த ஒரு மாதமும் குழந்தைகளும் இந்த ஜோடிகளுடனேயே காரில் பயணித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
பல இடங்களுக்கு சென்று இருவரும் சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது. பகல் முழுவதும் காரில் சுற்றிவிட்டு இரவு சமயத்தில் சர்ச் மற்றும் லாட்ஜ்களில் தங்கி வந்திருக்கிறார்கள். இதற்கு நடவே காவல்துறையினர் தங்களை தேடுவதை தெரிந்து கொண்ட அந்த ஜோடி குடும்பத்தாரிடம் சிக்கிக்கொண்டால் அவர்கள் விரும்புவதைப் போல வாழ முடியாது என முடிவு செய்து விட்டனர். கையில் இருந்த பணம் குறைந்து கொண்டே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் தேவசகாயம் மவுண்ட் சர்ச் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் சாப்பாடு வழங்கி விட்டு காரில் வசதியாக படுக்க வைத்திருக்கிறார் ஷாமினி.
குழந்தைகள் இருவரும் நன்றாக உறங்கிய பிறகு ஷாமினியும், சூசைநாதனும் அதிகாலை 2 மணி அளவில் காரிலிருந்து வெளியே வந்துள்ளனர். சர்ச் வாசலில் தரையில் போர்வையை விரித்து அதில் அமர்ந்த இருவரும் அப்படியே தரையில் சாய்ந்து இருக்கின்றன. இது குறித்த வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் தான் இந்த தற்கொலை சம்பவம் குறித்து மேலும் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சூசைநாதனும், ஷாமினியும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள், ஷாமினியின் கணவர் ராஜேஸ் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்று இருக்கிறார். அப்போதுதான் ஷாமினிக்கும், சூசைநாதனுக்கும் நெருக்கம் அதிகரித்து இருக்கிறது.
கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை சூசைநாதனுக்கு வழங்கியுள்ளார் ஷாமினி. அந்த பணத்தில் தான் கார்களை வாங்கி சூசைநாதன் டிராவல்ஸ் நிறுவனத்தையே தொடங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர்தான் சூசை நாதனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் அவருக்கு திருமணம் நடைபெற்ற சிறிது நாட்களிலேயே கணவரின் நடத்தையின் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டு அது தொடர்பாக விசாரித்த போது சூசைநாதனின் தவறான நடவடிக்கை அதற்கு தெரிந்து விட்டதால் பெற்றோரின் வீட்டிற்கு அந்த பெண் சென்று விட்டார். அதன் பின்னர் கள்ளக்காதலையுடன் பழக்கத்தை சூசைநாதன் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சமயத்தில்தான் வெளிநாடு சென்றிருந்த ராஜேஷ் நாடு திரும்பினார். ஆகவே கள்ளக்காதலை தொடர இயலாத இந்த ஜோடி மனம் வந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை மேற்கொண்டுள்ளது என்று சொல்கிறார்கள். இதற்கு நடுவே கள்ளக்காதல் ஜோடியின் 2 உடல்களும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பிறகு ஷாமினியின் கணவர் ராஜேஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் வந்து ஷாமினியின் உடலை பெற்றுக் கொண்டு சென்றார்கள். ஆனால் சூசைநாதனின் தரப்பில் யாருமே உடலை வாங்குவதற்காக வரவில்லை என்கிறார்கள். அவருடைய மனைவிக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தபோது சரியான பதிலை கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அத்துடன் தன்னுடைய கணவருக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்தது தெரிய வந்ததால்தான் அவரை விட்டு பிரிந்து வந்ததாக அந்த பெண் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில், ஷாமினியின் உறவினர்கள் கோபத்திலும், சோகத்திலும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் தெரிவித்ததாவது, கள்ளக்காதல் விவகாரத்தால் சிக்கிக்கொண்ட ஷாமினி ஏற்கனவே ஒரு முறை வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலுடன் சென்றவர் என்றும், ஆனால் சில தினங்களில் அவர் வீடு திரும்பிய நிலையில் கூட கணவர் ராஜேஷ் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அதனை மறந்து விட்டு கடந்த 17ஆம் தேதி மீண்டும் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார் ஷாமினி என்று சொல்கிறார்கள். ஷாமினியின் உறவினர்கள் அன்பான கணவன் அழகான குழந்தைகள் என்று நல்லதொரு வாழ்க்கை அமைந்தும், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சீரழிந்து போனது ஷாமினி தான் என்று கூறப்படுகிறது. தற்போது 2 குழந்தைகளும் நிர்கதியாக நிற்கின்றனர் என்று ஷாமினியின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகிறார்கள்.