fbpx

கர்நாடகத்தில் அன்பு வெற்றி பெற்றுள்ளது……! வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேச்சு…..!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் 136 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னிலையில் உள்ளதால், அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்ட நிலையில், அந்த கட்சியின் தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

ஆகவே தலைநகர் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி. ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கிய தொண்டர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. இந்த வெற்றி அனைத்து மாநிலங்களிலும் தொடரும் என்று கூறியுள்ளார்.

அவதூறான மொழியை பேசி நாங்கள் தகராறு செய்யவில்லை. நாங்கள் கர்நாடக மாநிலத்தின் ஏழைகளுக்காக சண்டையிட்டோம் வெறுப்பு அரசியல் என்பதை கர்நாடக மாநிலத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த மாநிலத்தில் அன்பு வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வழங்கிய 5 வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

Next Post

பிளஸ்-2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்றது எப்படி…..? வெற்றியின் ரகசியம் என்ன….? டிஜிபி சைலேந்திரபாபுவிடம் தெரிவித்த மாணவி நந்தினி…..!

Sat May 13 , 2023
தமிழகத்தில் முதல்முறையாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600/ 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இந்த மாணவியை முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியருடன் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல நேற்று […]

You May Like