fbpx

வறுமையால் வந்த கொடுமை…..! ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை…..!

மணி ஈஸ் ஆல் வேஸ் அல்டிமேட் என்று சொல்வதை போல பணம் ஒரு மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். அதேபோல பணம் இல்லை என்றால் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், சமூகத்தில் மதிப்பு இருக்காது என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

ஆனால் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஒரு சிலரை பார்க்கும்போது கடவுள் இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலையை கொடுத்தார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.ஒருவரிடம் பணம் இருக்கும் போது அந்த பணத்தின் அருமை அவர்களுக்கு தெரிவதில்லை. அதேபோல பணத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு அந்த பணம் கையில் கிடைப்பதில்லை.

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சார்ந்தவர் ஆண்டனி (62) இவருடைய மனைவி ஜெசி (56) இந்த தம்பதிக்கு 21 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள் மகள் சில்னா தொடுபுழாவில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுடைய மகன் சிபின் மங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ஆண்டனி தொடுபுழாவில் ஒரு பேக்கரி கடை ஒன்றை நடத்தி வந்தார். அவர்கள் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த குடும்பத்தினருக்கு பண பிரச்சனை ஏற்பட்டது. ஆகவே பல பகுதிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள், கடன் வாங்கி தான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது ஆகவே வீட்டு வாடகைக்கு கூட பணம் இல்லாமல் ஆன்டனி சிரமப்பட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து, ஆண்டனியின் குடும்பத்தார் மூவரும் 8️ நாட்களுக்கு முன்னர் வீட்டில் விஷம் அருந்தி உள்ளனர் இதனையறிந்து கொண்ட அக்கம், பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அங்கே 3 பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. முதலில் சிகிச்சை பலனின்றி ஜெசி உயிரிழந்தார், அடுத்த சில தினங்களில் ஆண்டனி உயிர் இழந்தார், இதனை தொடர்ந்து சில்னாவுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் அவரும் திடீரென்று உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன பிரச்சனையின் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

”எங்களது ஆதரவு இந்த வேட்பாளருக்கே”..!! டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு..!!

Thu Feb 9 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து வெறுமனே 10,000 வாக்குகள் கூடுதலாக பெற முடியுமே தவிர அவர்களால் வெற்றி பெற முடியாது. குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது […]

You May Like