கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செபி (33) இவருக்கும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 1/2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 80 கிராம் தங்க நகையை மணமகன் மீட்டருக்கு வரதட்சணையாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் திருமணம் ஆன சில மாதங்களிலேயே வரதட்சணை போதவில்லை என்று மனைவியை கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பெண் வீட்டார் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆகவே அவர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை. ஆனாலும் கணவரின் கொடுமைகளை சுமார் 2.5 ஆண்டு காலம் அந்த பெண்மணி பொறுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு விபரீத செயலில் கணவர் செபி ஈடுபட்டிருக்கிறார். அதாவது தன்னுடைய மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த மனைவி, தன்னுடைய பிறந்த வீட்டாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண் தன்னுடைய பெற்றோரின் துணையுடன் அழகே உள்ள கும்பங்குளம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் ஆகவே கணவர் செபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். செபியின் செல்போனை கைப்பற்றி அதனை சோதனை செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதோடு வழக்கை விரைந்து முடித்து உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்று அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.