சென்னை அடுத்த போரூரில் வசித்துவரும் 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். போரூர் அடுத்துள்ள அய்யப்பன்தாங்கல், அருகே சென்று கொண்டிருந்த போது காரை வழி மறித்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரை அடித்து விரட்டி விட்டு காரில் இருந்த பெண்ணை காரோடு கடத்தி சென்றுள்ளனர்.
பிறகு அங்கிருந்த ஒரு காலி இடத்தில் வைத்து அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு அந்த பெண் அணிந்திருந்த எட்டு சவரன் நகையையும் பறித்து கொண்டு அவர்கள் தப்பி சென்றனர். இதுபற்றி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். கஞ்சா போதையில் அவர்கள் இந்த குற்றத்தை செய்துள்ளது, காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.