fbpx

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இளைஞர் படுகொலை…..! 2 பேர் கைது…..!

சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணா(26). சன்னியாசிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

இது தொடர்பாக தகவல் அறிந்து தலைமை செயலக காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை அயனாவரம் புதுநகரை சேர்ந்த அர்ஜுன்( 23) தலைமையிலான கும்பல் தான் இந்த கொலையை செய்திருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தலைமறைவாக இருக்கின்ற மேலும் 3 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகின்றனர். அதோடு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

Next Post

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! இன்று தான் கடைசி நாள்!

Mon May 22 , 2023
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  சேருவதற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாளாகும்.  2023-24 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இம்மாதம்  8ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. www.tngasa.in  என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. முதலில் மே 19ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த […]

You May Like