fbpx

கணவனை கொலை செய்வதாக நினைத்து மனைவி மீது கார் ஏற்றி படுகொலை! திருவண்ணாமலை அருகே கொடூரம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை சேட் நகர் பகுதியில் முருகன் விஜயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முருகனின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தின் பின்னால் வந்த கார் ஒன்று அவர் இருசக்கர வாகனத்தின் மீது இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. இந்த முகத்தில் படுகாயமடைந்த விஜயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் நேற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு நடுவில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்ற காரை அருகில் இருந்த நபர்கள் துரத்தி சென்று பிடிக்க முயற்சி செய்தபோது காரில் இருந்த நபர்கள் கீழே இறங்கி தப்பி ஓடி உள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த செய்யாறு காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில், செய்யாறு காவல் நிலையத்தில் விஜய லட்சுமியின் கணவர் முருகன் ஒரு புகார் மனுவை வழங்கினார்.

அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எனக்கும் செய்யாறு கிடங்கு தெருவை சார்ந்த பிரபு மற்றும் கொடநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இடையே ஏற்கனவே மது விற்பனை குறித்து பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், இறந்து போன என்னுடைய மனைவியிடம் பிரபு மற்றும் வெங்கடேசன் உள்ளிட்டோர் கடந்த 25 ஆம் தேதி தகராறு செய்திருக்கிறார்கள். அப்போது பிரபு விஜயலட்சுமியிடம் என்றாவது ஒருநாள் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றிருக்கிறார் எனவும், அவர்கள் தான் என்னுடைய மனைவியை கொலை செய்திருக்க வேண்டும் என்றும், அந்த மனுவில் குறிப்பிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

அவிநாசி அருகே 3வது கணவரால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்மணி! காவல்துறையினர் விசாரணை!

Tue Jan 3 , 2023
கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்காக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கொலை செய்வதால் அந்த பிரச்சனை தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சனை பெரிதாகத்தான் தொடங்கும். ஆனால் தற்போது இது யாருக்கும் புரிவதில்லை. தகராறு என்று வந்துவிட்டால் அந்த தகராறில் கோபம் ஏற்பட்டு விட்டால் அந்த கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்து விடுகிறார்கள். அந்த வகையில், திருப்பூர் […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like