fbpx

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை….! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!

சிவகாசி அருகே உள்ள கிளியம்பட்டியை சேர்ந்தவர் பிலாவாடியான் இவருடைய மனைவி அந்தோணியம்மாள். இவர்களின் மகள் தங்கம்மாள் (25) வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக புதிதாக ஸ்கூட்டி ஒன்றை வாங்கினார். தங்கமாரின் சித்தி மகனான ராஜபாளையத்தை சேர்ந்த மோட்ச ராஜா(23) என்பவர் ஒரு ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது தங்கம்மாளை காதலிப்பதாக மோட்ச ராஜா தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு தங்கம்மாள் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2013 ஆம் வருடம் மே மாதம் 19ஆம் தேதி தங்கம்மாள், மோட்சராஜா, அந்தோணியம்மாள் உள்ளிட்ட 3 பேரும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்லமநாயக்கன் பட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வைத்து அந்தோணியம்மாள் கண் முன்னே துப்பட்டாவால் தங்கம்மாளின் கழுத்தை நெரித்து மோட்சராஜா கொலை செய்துள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோட்ச ராஜாவை கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் மோட்ச ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

Next Post

திமுக கவுன்சிலரின் மகனுக்கு அரிவாள் வெட்டு….! திருவள்ளூர் அருகே பரபரப்பு…..!

Sat May 6 , 2023
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர திமுக துணைச் செயலாளர், திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன் இவரும் திமுக மாணவர் இளைஞர் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். இவர் அரசு மருத்துவமனை அருகே ஒரு ஆங்கில மருந்து கடையில் நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. திருவள்ளுவர் நகரில் ஜே என் சாலையில் அமைந்திருக்கின்ற அவருடைய மருந்து கடையை திறப்பதற்காக கலைவாணன் வருகை தந்த போது 4 […]

You May Like