எப்போதும் 10 மற்றும் 11, 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது தோல்வி அல்லது குறைந்த அளவிலான மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
அந்த வகையில், நேற்று தமிழ்நாடு முழுவதிலும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது பொது தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்தல் தோல்வி அடைந்ததால் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ரயில் முன்பு பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, இந்த மாணவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.