மதுரை மேலூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை கடந்த 2014ஆம் வருடம் மதுரை மேலூர் அருகே இருக்கின்ற மனப்பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் என்று செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் மதுரம் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்ட மோகன்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மோகன்ராஜுக்கு 11 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவாளி மோகன்ராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதோடு இந்த வழக்கில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து நீதிமன்றத்தில் வேகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் நீதிமன்ற காவலருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.