fbpx

அமமன் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்கத் தாலி திருட்டு……! சென்னையில் பட்ட பகலில் துணிகரம்…..!

சென்னை புழல் அடுத்துள்ள காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது இந்த ஆலயத்தின் பூசாரி கடந்த 3ம் தேதி காலை வழக்கம் போல பூஜைகளை செய்து விட்டு காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சென்று விட்டு மறுபடியும் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 4️ சவரன் தங்கத் தாலி திருடு போயிருந்தது.

இது தொடர்பாக உடனடியாக புழல் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் மர்மநபர் ஒருவர் கோவிலில் வந்து சாமி கும்பிடுவதைப் போல அக்கம் பக்கம் பார்த்துவிட்டு யாரும் இல்லாத சமயத்தில் கருவறைக்குள் நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் செயினை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலியை திருடி சென்ற நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் அவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த லிங்கமூர்த்தி தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் கோவிலில் துணிகரமாக வந்து அம்மன் கழுத்தில் இருந்து நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…..! தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

Mon May 8 , 2023
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது. அதே சமயம் கோடை மழையும் பெய்து வருவது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் சற்றே தணிந்துள்ளது. இத்தகைய நிலையில் தான் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like