fbpx

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா கலாச்சாரம்….! இளம்பெண்ணிடம் சிலுமிசம் செய்த சிறுவன் தட்டிக்கேட்ட கணவன் கொடூர கொலை….!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ள மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் செங்கல் சூளை தொழிலாளி என்று கூறப்படுகிறது. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் தெருமுனையில் உள்ள கடைக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக சித்ரா சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் சித்ராவிடம் தரக்குறைவாக பேசி கிண்டல் செய்ததாக சொல்லப்படுகிறது. சிறுவன் கஞ்சா போதையில் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் அவனிடமிருந்து தப்பிச்சென்று தன்னுடைய கணவனிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, கோபம் அடைந்த விஜயகுமார் நேரடியாக சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த சிறுவனை சித்ராவிடம் கிண்டல் செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அந்த சிறுவன் மிரட்டும் விதத்தில் பதில் அளித்து இருக்கிறார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. ஆத்திரம் கொண்ட சிறுவன் கஞ்சா போதையில் தான் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து விஜயகுமாரின் கழுத்துப் பகுதியில் பலமாக தாக்கி இருக்கின்றார்.

இதில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடமையாக அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

பெற்றோர்களே கவனம்.. கொரோனாவால் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு..

Tue Apr 11 , 2023
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.. அதிக காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர், டாக்டர் விபின் வசிஷ்தா இதுகுறித்து பேசிய போது “ 6-11 மாத வயதுடைய குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது, பெரும்பாலான குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் அழற்சியின் அம்சங்களுடன் மிதமான […]

You May Like