ஜார்கண்ட், பிஹார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வரதட்சணைக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பல கொலை சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்திலுள்ள தாராப்பூர் கிராமத்தில் 12வது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஆத்திரம் கொண்ட கணவர் அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.தாராபூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரா துரி என்பவருக்கு 12 திருமணங்கள் நடைபெற்றுள்ளனர். அவருடைய மோசமான குணம் காரணமாக 11 மனைவிகள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.
மேலும் இவர் வரதட்சணைக்காக மட்டுமே அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொள்வதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கிறார்கள் இத்தகைய நிலையில், சென்ற வருடம் சாவித்திரி தேவி (40) என்ற பெண்ணை ராம்சந்திராதுரி 12வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது இருவருக்கும் குடி பழக்கம் இருந்ததால் மதுபோதையில் அவர்கள் வாக்குவாதம் செய்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த விதத்தில் நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். நள்ளிரவு சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரம் கொண்ட ராமச்சந்திரா வீட்டில் இருந்த கட்டையால் சாவித்திரியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாவித்திரி மயக்கமடைந்து கீழே சரிந்தார்.
அதன் பிறகு நேற்று காலை அக்கம் பக்கத்தினர் சாவித்திரியை காண்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்ற போது அவர் உயிரிழந்த கடந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதோடு அவருடைய கணவரையும் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வரதட்சணையின் காரணமாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் இதன் காரணமாக, ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அவருடைய கணவர் சாவித்திரியை கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது.