நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக தன்மை கொண்ட நடிகர் மனோபாலா சென்ற சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மெதுவாக உடல் நலம் தேறினார்.
இந்த நிலையில், மறுபடியும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று திடீரென்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் இருக்கின்ற அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு, நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, சித்தார்த், கவுண்டமணி சரத்குமார், ராதிகா இயக்குனர்கள் மணிரத்தினம் அமீர் உள்ளிட்டோரும் மனோபாலாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதேபோல நடிகைகள் குட்டி பத்மினி, ஆர்த்தி இசையமைப்பாளர் தீனா, இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, ஆர்.வி உதயகுமார், ரவி மரியா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் மனோபாலாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவருடைய உடல் இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கத்தில் இருக்கின்ற மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது