மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் அதிமுகவின் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இவர் சீர்காழியை அடுத்துள்ள புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி ஒரு மாணவிக்கு கைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்தியை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அறிந்து கொண்ட அந்த கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த திலிப் குமார் (19) என்ற மாணவர் தட்டி கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே அவர் மீது ஆத்திரம் கொண்ட பேராசிரியர் சத்தியமூர்த்தி கீழவல்லம் கிராமத்தைச் சேர்ந்த அருள் அரசனை தூண்டி விட்டிருக்கிறார் அதன் பெயரில் அருளரசன் கல்லூரி முடிந்து வெளியே வந்த திலீப்குமாரை வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுதாயமடைந்த திலீப்குமாரை அருகில் இருந்த சக மாணவர்கள் மீது சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இது தொடர்பாக கொள்ளிடம் காவல்துறையைச் சார்ந்தவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருளரசன், அருள்செல்வன் என்ற இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதோடு தலைமறைவாக இருக்கின்ற பேராசிரியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.