எத்தனையோ தம்பதியினர் குழந்தைகள் இல்லை என்று ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் குழந்தை செல்வங்களை இறைவன் வழங்குவதில்லை. குழந்தையின் அருமை தெரியாமல் அந்த குழந்தைகளை படாத பாடுபடுத்தும் ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டும் உடனே குழந்தை பிராப்த்தம் கிடைத்து விடுகிறது.அப்படி வர பிரசாதமாக கிடைத்த குழந்தைகளை அந்த குழந்தைகளின் பெற்றோரே கொலை செய்யத் துணிந்தால்,
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் கடந்த புதன்கிழமை அன்று 30 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி இல்லாத பெண் ஒருவர் தன்னுடைய எட்டு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். மிகக் கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு லால்முங் பிபி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன்பிறகு சிறுமியின் சடலத்தை அந்த பகுதி மக்கள் மீட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பிரேத பரிசோதனைக்காக ஜாங்கிப்பூர் மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது அலாவுதீன் ஷேக் என்பவர் முதல் மனைவி உயிரிழந்த பிறகு 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
அந்த சிறுமியின் தந்தை ஷேக் தன்னுடைய குழந்தையை தன்னுடைய 2வது மனைவிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ஆனால் இது அவருடைய இரண்டாவது மனைவிக்கு பிடிக்கவில்லை. ஆகவே சிறுமியின் கழுத்தை நெறித்தது மட்டுமல்லாமல் பிபி அந்த சிறுமியை மேலும் தாக்குவதற்கு முன்பாக கழுத்து மற்றும் உடல் பகுதியில் கீரியுள்ளார் என்றும் சிறுமியின் தந்தை குற்றம் சுமத்தி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.