fbpx

தமிழகத்தில் மீண்டும் மழை.! மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கடும் மழை மற்றும் புயல் தமிழகத்தை ஆட்டுவித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நகரமே மொத்தமாக முடங்கியது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளில் கன மழை பெய்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்தப் பகுதிகளில் நிவாரண பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலையாக மையம் கொண்டிருப்பதால் அடுத்த 48 மணி நேரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Post

பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு.! கொதிக்கும் சட்டிக்குள் வீசப்பட்ட தலித் பெண்.! 3 பேர் மீது வழக்கு.!

Sun Dec 31 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் எண்ணெய் சட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள எண்ணெய் ஆலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த தினத்தன்று அந்த ஆலையின் முதலாளி […]

You May Like