சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அவருக்கு செய்த பரிசோதனையில் இதயத்தில் முக்கிய 3 ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மறுத்தவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கு நடுவே சென்னை காவிரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. ஆகவே பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இன்று காலை 5 15 மணி அளவில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்தது காவிரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தது.
இதன் பிறகு காலை 10:45 மணி அளவில் சிகிச்சை முடிவடைந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆகவே இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.