சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று காலை 5.30மணி அளவில் மிக தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு வட மேற்கு திசையில் நிலை கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இது வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுவடைந்து, வரும் 14ஆம் தேதி நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் கடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
வரும் 13ஆம் தேதி அதாவது நாளை முதல் 16ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்பதை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.