fbpx

சிறைகளில் காவலர்களை தாக்கும் கைதிகள்! சிறைத்துறை எடுத்த அதிரடி முடிவு!

முன்பெல்லாம் ரவுடிகள் வெளியே இருக்கும் சில சாதாரண மக்களை தாக்கி விட்டு சிறைக்குச் செல்வார்கள். அங்கே காவலர்களுக்கு பயந்து நடுங்கி, ஒடுங்கி இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறையில் இருக்கக்கூடிய கைதிகள் காவலர்களையே தாக்கும் சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே, அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

ஆனால் இப்படிப்பட்டவர்களை சமாளிப்பதற்கு காவல்துறையினரே தினறித்தான் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அத்துடன் தமிழக சிறைகளில் நடைபெறும் விதிமீறல்கள், அத்துமீறும் செயல்கள் உள்ளிட்டவை வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. என்னதான் சிறையில் கைதிகள் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்று சொன்னாலும், கைதிகளால் தற்போது காவலர்களும் துன்பத்தை அனுபவித்து தான் வருகிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சம் ஆகிறது.

ஆகவே இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வரும் விதத்தில் தமிழக சிறை துறை சார்பாக போலீசாரின் உடையில் அணியும் விதத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில், 50 நவீன கேமராக்கள் 46 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற 9 மத்திய சிறைகளுக்கும், புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறைக்கும் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த விதத்தில், நேற்றைய தினம் சென்னை புழல் மத்திய சிறை பொலிஸாருக்கு இந்த கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அனைத்து மத்திய சிறைகளுக்கும் இந்த நவீன கேமரா வழங்கப்பட உள்ளது. உயர்தர பாதுகாப்பு அம்சத்தை கொண்டிருக்கும் செல்களில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக செல்லும் போலீசார், தங்களுடைய உடைகளில் இந்த கேமராவை நிச்சயமாக அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவையும் சிறைத்துறை பிறப்பித்திருக்கிறது.

இந்த கேமராக்களின் மூலமாக எடுக்கப்படும் வீடியோ காட்சிகள் அனைத்தையும் சிறையில் தலைமையகத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமில் இருந்தபடி சிறைத்துறை அதிகாரிகள் கண்காணிக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஆகவே எதிர்காலங்களில் சிறைகளில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் காவலர்கள் மீதான தாக்குதல்கள், அதோடு விதிமீறல்கள் உள்ளிட்டவை குறைவதற்கான வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்..!! குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!! திருமண நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்..!!

Fri Dec 9 , 2022
திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிலிண்டர்கள் வெடித்து இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்காக உணவு தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு திடீரென சிலிண்டர் பலத்த சத்ததுடன் வெடித்தது. […]
திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்..!! குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!! திருமண நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்..!!

You May Like