சில நேரங்களில் பெற்றோர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் பலியாகி விடுகிறார்கள். ஆனால் இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டு தவறு செய்யும் நபர்கள் எதுவுமே அறியாத நபர்களை பலி கொடுக்கும் செய்தி வருத்தம் அளிக்கும் விதமாக இருக்கிறது.அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலம் ஆம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசில் வர்மா இவருக்கு ஸ்மிருதி ராணி வர்மா என்ற மனைவியும் குஷ்பு வர்மா என்ற 16 வயது மகளும் இருக்கிறார்கள்.
தாயார் ஸ்ருதி ராணிக்கும், தந்தை சுசீலுக்கும் சில வருடங்களாகவே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுருதி ராணி கணவரை பிரிந்து மகள் குஷ்பு வர்மாவுடன் ஸ்ருதி ராணி தனியாக வசித்து வந்திருக்கிறார். அப்போது ஸ்ருதி ராணிக்கும், அனில்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரின் பழக்கமும் ஸ்ருதி ராணியின் மகள் குஷ்பூ வருமாவுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் கடந்த 21 ஆம் தேதி சுமதி ராணியின் வீட்டில் அவருடைய மகள் குஷ்பூ வருமா தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று தாய் ஸ்ருதி ராணி நாடகம் ஆடிய நிலையில், தந்தை சுனிலுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்மிருதிராணி , அவருடைய காதலன் அணில்குமார் மீதும், சுசில் காவல்துறையிடம் புகார் வழங்கினார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாங்கள் இருவரும் தான் குஷ்புவை கொலை செய்தோம் என்று ஸ்ருதிராணியும், அனில்குமாரும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் மொராதாபாத் சிறையில் அவர்களை அடைத்திருக்கிறார்கள்.