பலர் திருமணம் ஆகி பல வருடங்கள் சென்ற பின்னரும் குழந்தைகள் இல்லையே என்று மன வருத்தத்துடன் குடும்பம் நடத்தி வருகின்றனர்.மேலும் குழந்தைகள் இருந்தால் போதும் என்று மருத்துவமனைக்கு சென்று லட்ச, லட்சமாக செலவு செய்பவர்களும் உண்டு.
அதோடு லட்சங்களில் செலவு செய்து பார்த்த பின்னரும் மருத்துவம் கைவிட்டாலும், தெய்வம் நமக்கு கை கொடுக்கும் என்று கோவில் கோவிலாக குழந்தை வரம் வேண்டி ஏறி, இறங்கும் தாய்மார்கள் ஏராளம்.ஆனால் குழந்தை வரம் கிடைத்த பலர் அந்த குழந்தைகளின் அருமை தெரியாமல் அவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து விடுகிறார்கள்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்துள்ள செந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கௌரி (26) இவருக்கும் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்ற நபருக்கும் சென்ற 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது இந்த சூழ்நிலையில், இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும் பாவனா ஸ்ரீ (2) என்ற மகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தான் முத்துராஜ் சென்ற ஒரு மாத காலமாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதன் காரணமாக, முத்துராஜுக்கும், அவருடைய மனைவி கௌரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் சென்ற 17ஆம் தேதி இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முத்துராஜிடம் கோபம் கொண்ட கௌரி, செந்தாரப்பள்ளியில் இருக்கின்ற தன்னுடைய தாய் வீட்டிற்கு தன்னுடைய இரு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
இந்த நிலையில், சென்ற ஒரு வார காலமாக குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மன வேதனையில் காணப்பட்ட கௌரி, சென்ற 20ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து அவரும் விஷம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், தான் சற்று நேரத்தில் மயங்கி விழுந்த 3 பேரையும் அண்டை வீட்டார்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கே அவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருந்த நிலையில், கவுரியின் குழந்தைகள் ஜீவன் மற்றும் பாவனா ஸ்ரீ உள்ளிட்ட இருவரும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கௌரிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.