fbpx

கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டு ஓடிய மனைவி….! காவல் நிலையம் முன்பாக சரமாரியாக வெட்டிய கணவன் தேனியில் பயங்கரம்….!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்கா கொம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி கூலித்தொழிளாலியான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனையுடன் விவாகரத்தான நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் சங்கீதா என்ற பெண்ணை 2வதாக அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் தான் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதனை தெரிந்து கொண்ட தீபாவளி இருவரையும் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே கடந்த சில இடங்களுக்கு முன்னர் சங்கீதாவும் ஈஸ்வரனும் ஊரை விட்டு ஓடி மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கள்ளக்காதல் ஜோடியிடமும், தீபாவளியிடமும் காவல்துறையினர் அறிவுருத்தியிருக்கிறார்கள். அதன்படி நேற்றைய விசாரணைக்காக சங்கீதாவும், ஈஸ்வரனும் பேருந்தில் இருந்து இறங்கி ஆண்டிப்பட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில், இருவரையும் பார்த்த தீபாவளி ஆத்திரம் கொண்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனையும், சங்கீதாவையும் சரமாரியாக குத்தியிருக்கிறார். கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இருவரும் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வாசலில் தஞ்சம் அடைந்தனர்.

ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த இருவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தீபாவளியை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

Next Post

கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் தற்கொலை..!! நடந்தது என்ன..? விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Fri May 5 , 2023
கேரள மாநிலம் பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்த பிரவின்நாத் பாடிபில்டர், கேரளாவின் கோட்டக்கல்லைச் சேர்ந்த ரிஷானா ஐஷு மிஸ் மலபார் பட்டத்தை வென்றவர். 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தவர்கள் காதலர் தினத்தில் கரம் கோர்த்தனர். திருநங்கைகளான பிரவீனும், ரிஷானாவும் திருமணத்தின் மூலம் இணைந்தனர். இந்நிலையில், இவர்கள் பிரிந்து செல்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் சில சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் […]

You May Like