குடி என்ற அரக்கனால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர்.
இந்த குடியை ஒழிப்பதற்கு இதுவரையில் மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் சென்ற ஜூன் மாதம் இவருடைய குடும்பத்தில் உண்டான தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் சிங்காரவேல் ஜாமினில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து சிங்காரவேலு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் உறவினர்கள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை எனவும் ஜாமினில் எடுக்கவில்லை என தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கு அவருடைய அண்ணன் மகன் வினோத் தான் காரணம் எனவும், தன்னுடைய மனைவியை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில், நேற்று முன் தினம் காலை சிங்காரவேல் ஒர்க்குடி சிற்றாற்று பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிங்காரவேலின் அண்ணன் மகன் வினோத் மற்றும் அவருடைய நண்பர்கள் கருணாகரன், ரவீந்திரன், மனோஜ், தாமோதரன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதால் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வினோத் உள்ளிட்ட 6 பேரும் கீழ்வேளூர் காவல் நிலைய போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருக்கிறார்கள்.