நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணத்தை அடுத்துள்ள மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கின்ற ஆற்றங்கரை காமாட்சியம்மன் ஆலயத்திற்கு போயிருந்தார். அங்கே நயன்தாரா சென்றவுடன் ரசிகர்கள் பலரும் அங்கே ஒன்று திரண்டனர். இதன் காரணமாக, அவரால் நிம்மதியாக சாமி தரிசனத்தை கூட செய்ய முடியவில்லை.
வழிபாட்டை முடித்துவிட்டு உடனடியாக ஐராதீஸ்வர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கும் நயன்தாராவை காண வேண்டும் என்று அவருடைய ரசிகர்களுடன் தாய்மார்கள் பலரும் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நயன்தாரா தோளில் ரசிகை ஒருவர் கை வைத்ததால் கோபம் அடைந்து விட்டார்.
அதன் பிறகு ரயில் நிலையத்திற்கு சென்ற அவர் ரயிலில் ஏறிய பின்னர் அங்கு இருந்த ரசிகர் ஒருவர் நயன்தாராவை புகைப்படம் எடுப்பதற்கு முயற்சித்தார். அப்போது கோபமடைந்த நயன்தாரா, போட்டோ எடுத்தவரை பார்த்து செல்போனை உடைத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். சாமி தரிசனம் செய்த போது ஏற்பட்ட டென்ஷன் ரசிகர்கள் அதிகமாக ஒன்று கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உள்ளிட்டவற்றின் காரணமாக, அவர் சற்று கோபம் அடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.