fbpx

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்ட புதிய எஸ் எம் எஸ் வசதி….! இத மட்டும் நோட் பண்ணிக்கோங்க…..!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாகவும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமான பாமர மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் பல்வேறு விதமான சிரமங்களும், சிக்கல்களும் இருக்கின்றன. இதனால் இவர்களின் சிரமத்தை போக்கும் விதத்தில் தற்போது புதிதாக எஸ்எம்எஸ் வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி நீங்கள் ரேஷன் கார்டில் கொடுத்திருக்கின்ற செல்போன் நம்பரிலிருந்து PDS 102 என குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அன்றைய தினம் நியாய விலை கடை திறந்து இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோல PDS101 என்று குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் இருப்பு உள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதோடு இதன் மூலமாக நியாய விலை கடைகளுக்கு செல்வதில் உண்டாகும் அலைச்சல் மிச்சமாகும். அதோடு, புதிய எஸ்எம்எஸ் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவலை சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேல் தெரிவித்திருக்கிறார்

Next Post

உயிரை பணயம் வைக்கும் பெண்கள்..!! இப்படி ஒரு நிலைமையா..? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!

Fri May 19 , 2023
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் ஆபத்தான முறையில் கிணற்றில் நீர் இறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நாசிக்கில் உள்ள பெயிண்ட் என்ற கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சரிந்துள்ளதால் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கிராமத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக பெண்கள் பல கிலோ மீட்டர் […]
உயிரை பணயம் வைக்கும் பெண்கள்..!! இப்படி ஒரு நிலைமையா..? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!

You May Like