fbpx

ட்விட்டர் வலைதளத்தில் இனி பிரபலங்களுக்கு ப்ளூடிக் இல்லை…..! எலான் மஸ்க் எடுத்த அதிரடி நடவடிக்கை…..!

ட்விட்டரில், அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் இருக்கின்ற பிரபலங்களுக்கு தனி அடையாளமாக அவர்கள் பயன்படுத்தும் twitter பக்கத்தில் அதிகாரக் குறியீடு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதற்கு பின்னர் அந்த அதிகார குறியீட்டை பெறுவதற்கு கட்டணத்தை அறிவித்தார். ஒவ்வொரு கணக்குக்கும் 8 டாலர்களாக அந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி இந்திய மதிப்பில் மாதந்தோறும் 657 ரூபாய் கட்டணம் செலுத்துவோருக்கு அந்த அதிகார குறியீடு வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதிக்குப் பின்னர் கட்டணம் செலுத்தாதவர்களின் பக்கங்களில் இந்த அதிகாரக் குறியீடு நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.

இவ்வாறான சூழ்நிலையில், மாத கட்டணத்தை செலுத்தாமல் இருந்தவர்களின் கணக்குகளில் இருந்து அதிரடியாக அந்த அதிகாரக் குறியீட்டை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு மற்றும் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் பிரபலங்கள், போப் பிரான்சிஸ் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்பட உலகம் முழுவதும் பணம் செலுத்தாத ஏராளமான பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் அதிகாரக் குறியீடு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது

Next Post

பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைகளை செல்போன் பழக்கத்திலிருந்து மீட்க சூப்பர் டிப்ஸ்..!! ட்ரை பண்ணி பாருங்க..!!

Fri Apr 21 , 2023
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது. குழந்தைகள் கூட தங்களுக்கு ஏற்ற வகையில் வித விதமான வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட்ஃபோன்களை வைத்துள்ளனர். ஸ்மார்ட் ஃபோனால் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கின்றன என்றாலும், பல குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி விடுகின்றனர் என்பது சற்று ஆபத்தான விஷயமாகும். குறிப்பாக ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு வசதிகள் நன்மையை தருவதற்கு பதிலாக குழந்தைகளை அதற்கு அடிமையாக்கி நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோனிலும் ஆன்லைனிலும் செலவழிக்கும்படி செய்து […]

You May Like