உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பேடிஎம் நிறுவனம் மின்னணு பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்து வருகிறது. சிறிய பெட்டி கடை முதல், வணிக வளாகங்கள் வரையில் தற்போது பேடிஎம் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
பேடிஎம் பண பரிவர்த்தனையின் மூலமாக சுலபமாக வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் உள்ளிட்டவற்றுக்கும் கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டிடிஹச் உள்ளிட்டவை ரீசார்ஜ் செய்யும் வசதி போன்ற பல்வேறு வசதிகள் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக பேடிஎம் நிறுவனம் UPI Litc Fcature என்ற வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக பணம் செலுத்துவதில் உண்டாகும் சிக்கல் மற்றும் பேமண்ட் ஃபெயிலியர் ஆகாமல் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர யு பி ஐ பின் இல்லாமல் 200 ரூபாய் வரையில் உடனடி பேமென்ட் செய்யலாம். என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது இது மட்டும் அல்லாமல் யுபிஐ லைட் பேலன்ஸ் 1000 ரூபாய் கூடுதலாக சேர்த்தால் கேஷ் பேக் கிடைக்கும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.