fbpx

அவர் மட்டும் இல்லன்னா இது சாத்தியம் இல்லை…..! முதல்வரை ஒரே வார்த்தையில் மகிழ்வித்த பி டி ஆர்…..!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக அரசின் 2 வருட கால சாதனைகளை விளக்கம் விதமான கண்காட்சியை சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இத்தகைய நிலையில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசு 3ம் வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு தன்னுடைய வலைதள பக்கத்தின் மூலமாக தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 3வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், அவர் த அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பை என்னுடைய வாழ்வில் கிடைத்த மதிப்பான வெகுமதியாக கருதுகிறேன். மனநிறைவை வழங்கும் அனுபவமாகவும் நினைக்கின்றேன்.

இந்த ஆட்சி அடைந்திருக்கின்ற வெற்றிகளை எடுத்துரைத்தாலும் இத்தருணத்தில் என்னுடைய தலைவருக்கு நன்றி தெரிவிக்கவே நான் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் உன்னதமான சமத்துவ சமூகத்தை படைக்க வேண்டும் என்ற கழகத்தின் லட்சியத்தை முதல்வரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே செயல் வடிவம் பெற வைக்க முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Next Post

TN+2 Exam Result: தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருப்பது எந்த மாவட்டம் தெரியுமா….?

Mon May 8 , 2023
இந்த கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது.அதன்படி 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் இந்த வருடம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும் இது சென்ற வருடத்தை விட கூடுதல் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2021 நோய் தொற்று காலத்தை தவிர்த்து கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் […]

You May Like