ஞாயிற்றுக்கிழமையான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நாளை தேவர் ஜெயந்தி மற்றும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டு இருக்கிறார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற அனைத்து விதமான அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட வேண்டும்.
சட்ட விரோதமாக மது விற்பனை நடந்தாலோ அல்லது மதுபானத்தை கடத்தி வைத்தாலோ அதை பதுக்கி வைத்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடும் தண்டனை கொடுக்கப்படும்.” என்று எச்சரிக்கை எடுத்துள்ளார்.